வேலை வாங்கி தருவதாக 6 லட்சம் மோசடி ஒருவர் கைது.
மதுரை நவ 8 காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 6 லட்சம் மோசடி செய்ததாக ஒருவரை கைது செய்தபோலீசார் பல்கலை ஊழியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகனுக்கு மதுரை காமராஜர் பல்கலையில் வேலைவாங்கித்தருவதாக உறுதிஅளித்து காமராஜர்சாலைவடிவேல் நகரைச் சேர்ந்த சங்கர் 52 ,நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த பார்த்தசாரதி இவர் காமராஜர் பல்கலைக்கழக ஊழியர் ஆவார். இவர்களிருவரும் சக்திவேலிடம் 2017ஆம் ஆண்டு ரூபாய் 5 லட்சத்து 90 ஆயிரம் வாங்கியுள்ளனர்.
இந்த பணத்தை மதுரை மாவட்ட கோர்ட்எதிரே வைத்து வாங்கிஉள்ளனர்.ஆனால் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதனால் ஏமாற்றப்பட்ட சக்திவேல் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரைரை கைது செய்தனர்.பல்கலை ஊழியர் பார்த்தசாரதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணிடம் ரூபாய் 35 ஆயிரம் மதிப்புள்ள செல்போனுடன் ஹேன்ட் பேக்திருட்டு.
மதுரை: மதுரை சோலிங்கநல்லூர் நியூ குமரன்நகரைசேர்ந்தவர் ராகவேந்திரா மனைவி திவ்யசகாயமேரி. இவர் கீழ வெளி வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்..
பின்னர் பார்த்தபோது அருகில் வைத்திருந்த அவருடைய பேக்கை காணவில்லை இதை ஹோட்டலுக்கு வந்த மர்ம நபர் திருடிச் சென்று விட்டது தெரிய வந்தது.
அந்த பேக்கில் ரூபாய்.முப்பத்திஐந்தாயிரம் மதிப்புள்ள செல்போன் இருந்தது. இந்த திருட்டு குறித்து திவ்ய சகாயமேரி விளக்குத்தூண் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
நள்ளிரவில் விஷப்பூச்சி கடித்த பெண் பலி.
மதுரை: மதுரை ஆண்டாள் கொட்டாரம் ஒத்தவீடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதி மனைவி ராமு 50. இவர் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த போது விஷ பூச்சி கடித்துவிட்டது.
இதில் வாயில் நுரை தள்ள மயங்கி கிடந்தார்.இதனால் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மகன் முத்து கொடுத்த புகாரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் தூக்குபோட்டு தற்கொலை.
மதுரை: மதுரை திருநகர் ஐந்தாவது பஸ் ஸ்டாப்பை பகுதியை சேர்ந்தவர் சந்தானம் 61. இவருக்கு நீண்ட நாளாக தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது .இதனால் மனமுடைந்த சந்தானம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து திரு நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருமகனை தாக்கிய மாமனார் மைத்துனர்கள் கைது.
மதுரை: மதுரை செல்லூரில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகனை தாக்கிய மாமனார்,மைத்துனர்களை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உச்சி மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா கருணாநிதி 32. மதுரை செல்லூர் சுயராஜ்யபுரம் நான்காவது தெருவை சேர்ந்தவர் நடராஜன் 59. நடராஜனின் மகளை. ராஜா கருணாநிதிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ராஜா கருணாநிதியின் மனைவி தந்தை வீட்டிற்கு வந்து இருக்கிறார் .அவரை சமாதானம் செய்ய அழைத்து வந்த ராஜா கருணாநிதியிடம் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மாமனார்நடராஜன் மைத்துனர்கள் முத்துப்பாண்டி, வேல்முருகன் ஆகியோர் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
இந்தசம்பவம் குறித்து மருமகன் ராஜா கருணாநிதி கொடுத்த புகாரில் செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாமனார் நடராஜன், மைத்துனர்கள் முத்துப்பாண்டி வேல்முருகன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
முன்விரோதத்தில் வாலிபருக்கு சுத்தியல் அடி மற்றொரு வாலிபர் கைது.
மதுரை: மதுரை கோச்சடை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மாவாசை மகன் விக்னேஷ் 25. அதே பகுதியை சேர்ந்தவர் முத்தையாமகன்முத்துப்பாண்டி 30. இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் விக்னேஷ் முத்துப்பாண்டி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு விக்னேஷை சுத்தியலால் அடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் எஸ.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து முத்து பாண்டியை கைது செய்தனர்.
முன்விரோதத்தில் பீர்பாட்டில் குத்து வாலிபர் கைது.
மதுரை: மதுரை தேனி மெயின் ரோடு விராட்டிபத்துவை சேர்ந்தவர் ராஜேந்திரன் 58 .அதே பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரன் 24 .இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் விராட்டிபத்து மந்தை அருகே உள்ள இட்லி கடையில் இருந்த ராஜேந்திரனை குடிபோதையில் வந்த முனீஸ்வரன் பீர் பாட்டிலை உடைத்து குத்தியுள்ளார் .இந்த சம்பவம் குறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரில்எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர்.
இளைஞரை கொலை செய்து கிணற்றுக்குள் கல்லைகட்டி வீசி சென்ற கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு:
சோழவந்தான் அருகே கரட்டு்பட்டியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி மகன் கோட்டைசாமி 22.இவர்மீது கொலை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களாக கோட்டைசாமியை காணாவில்லை. பெற்றோர்கள் தேடிவந்த நிலையில்.
இன்று கரட்டுபட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஆண்பிணம் மிதப்பதாக சோழவந்தான் போலீசாருக்கு வந்த தகவலின் பேரில், சமயநல்லூர் துணைகண்காணிப்பாளர் திரு.பாலசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர் திரு.சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் மிதந்த உடலை நிலக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டு விசாரணை செய்ததில்,
இடுப்பில் கயிற்றுடன் மிதந்த உடலில் கழுத்து மற்றும் வயிற்று பகுதிகளில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தது கோட்டைசாமி என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையெடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டு கொலையாளிகளை பிடிக்க தனிபடை அமைத்து உத்திரவிட்ட நிலையில்,
ரவுகளுக்கு ஏற்பட்ட மோததால் கொலை நடந்ததா?.அல்லது பழிக்கு பழியாக நடந்த கொலையா?.உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.