அரசு புனர் வாழ்வு இல்லத்தில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை.
மதுரை நவ 6 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறையை சேர்ந்தவர் வேலுசாமி 60 .இவர் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
இவர் ஒத்தக்கடை ஒய் புதுப்பட்டியில் உள்ள அரசு புனர் வாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மனமுடைந்த வேலுசாமி புனர் வாழ்வு இல்லத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து இல்லத்தின் நிர்வாக அதிகாரியான டாக்டர் மணிவண்ணன் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து வேலுச்சாமியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலியோ நோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் திடீர் காய்ச்சலுக்கு பலி.
மதுரை: மதுரைகீழ் மதுரையை சேர்ந்தவர் பிச்சாண்டி மகன் ஜெகநாதன் 22.இவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந் நிலையில் மதுரை காமராஜர் சாலை பகுதியில் சென்றபோது.
திடீர் காய்ச்சல் ஏற்பட்டு மயங்கி விழுந்து பலியானார். இந்த சம்பவம் குறித்து அண்ணன் செந்தில்குமார் புகாரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை.
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் பாண்டி 19. இலர் சில தினங்களாக மன உலச்சலில் இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அம்மா பாண்டியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம்போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் பாண்டியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியை மறக்க மகன் கண்டித்ததால் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை.
மதுரை: மதுரை பைபாஸ் ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் லட்சுமணன் 56 .இவருக்கு அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் இருந்து வந்தது .
இதனால் இந்த பழக்கத்தை கைவிடும் பாரு மகன் சந்தோஷ்குமார் கண்டித்துள்ளார். மகன் கண்டித்ததால் மனமுடைந்த தந்தை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது குடித்து கொண்டாடிய வாலிபர் திடீர் சாவு.
மதுரை: உசிலம்பட்டி கட்ராம் பட்டியை சேர்ந்தவர் தயாளன் மகன் பின்னர் தேவன் 35 .இவருடைய மாமா வீடு செல்லும் பெரியார் தெரு கட்டபொம்மன் நகரில் உள்ளது.
மாமா வீட்டிற்கு வந்த பின்ன தேவன் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக மாமாவிடம் சேர்ந்து மது அருந்தினார். அப்போது அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உடல்நிலை கோளாறு ஏற்பட்டது மயங்கினார்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காய்கறி வாங்க சென்றவர் மயங்கி விழுந்து பலி.
மதுரை: காய்கறி வாங்க சென்ற ஒருவர் சென்ட்ரல் மார்க்கெட் அருகே மயங்கி விழுந்து பலியானார். இது குறித்து மாட்டுத்தாவணி சப்-இன்ஸ்பெக்டர் திரு.செல்வகுமார் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் இறந்தவர் சுந்தர் 43 என்று தெரியவந்தது .இவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.