மாடக்குளத்தில் 2 வாலிபர்கள் கைது!
மதுரை : மதுரை முதுகுளத்தூர் கடலாடியை சேர்ந்தவர் முருகேசன் மகன் கருணாகரன் (20) இவர் மாடக்குளம் கோபாலி மலை அருகே சென்றபோது இரண்டு வாலிபர்கள் வழிமறித்து கத்தி முனையில் மிரட்டினர். அவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பணம் ரூபாய் மூவாயிரத்தை பறித்துச் சென்று விட்டனர். இந்த வழிப்பறி குறித்து கருணாகரன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பழங்காநத்தம் மருது பாண்டியர் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் முருகன் (22), பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் கரிகால பாண்டியன் (20) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!
சிம்மக்கல்லை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் வெங்கடேசன் (35), இவருக்கு வயிற்று வலி இருந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடையவில்லை. இதனால் மணமுடைந்த வெங்கடேசன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி புனித லட்சுமி விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பதுங்கி இருந்த 4 பேர் கைது!
திருப்பரங்குன்றம் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் முருகன், இவர் தென்பரங்குன்றம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் பனங்குளம் கண்மாய் கரையில் சென்றபோது கும்பலொன்று பதிங்கிருப்பதை கண்டார். அவர்களை போலீசாருடன் சுற்றி வளைத்து பிடித்தார். அவர்களிடம் சோதனை செய்தபோது அவர்கள் மூன்று வாள் மறைத்து வைத்திருந்தனர் .அவற்றை பறிமுதல் செய்தார் .பின்னர் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார் விசாரணையில் திருப்பரங்குன்றம் குட்டி கொத்தனார் தெரு சேகர் மகன் நாகராஜ் (22), அதே பகுதியை சேர்ந்த ஜஹாங்கீர் மகன் நூர்கான் (22), ஆரப்பாளையம் நாகராஜன் (19) மற்றும் தென்பரங்குன்றம் (17) வயது சிறுவன் என்று தெரிய வந்தது. இவர்கள் நான்கு பேரையும் அவர் கைது செய்து மேலும் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் அந்த பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது அவர்களை கைது செய்தார்கள்.
போதை மருந்து கலந்து தொழில் அதிபரிடம் ரூ 5 லட்சம் கைவரிசை!
கோமதிபுரம் சன் ஸ்டார் தெருவை சேர்ந்தவர் சஞ்சய் குமார் (56) இவர் தொழில் அதிபராவார்.இவர் திடீர் நகர் பகுதியில் பச்சை நாச்சியம்மன் தெருவில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் வேலை பார்த்து பார்ப்பவர் ஜிஜேந்தர் (34) இவர் சம்பவத்தன்று டீயில் போதை மாத்திரையை கலந்து முதலாளி சஞ்சீவிகுமாரிடம் கொடுத்துள்ளார்.டீயை குடித்ததும் சஞ்சய் குமார் மயங்கினார். பின்னர் அவரிடம் இருந்து ரூபாய் 5 லட்சத்தை ஜிஜேந்தர் திருடிச் சென்றுவிட்டார். இந்த திருட்டு குறித்து சஞ்சய் குமார் திடீர் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் ரூ.5 லட்சம் திருடிய வேலையால் ஜிஜேந்தரை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி