கடன் பிரச்சனையில், வீடு புகுந்து தாக்குதல் வாலிபர் கைது!
மதுரை : மதுரை அனுப்பானடி ரோடு பகலவன் நகர் பூக்கார தெருவை சேர்ந்தவர் சங்கிலி கருப்பன் மகன் சந்தியா (19), சங்கிலி கருப்பன் அனுப்பானடி பொண்ணு பிள்ளை தோப்புவை சேர்ந்த செல்ல பாண்டி மகன் பெரிய சாமியிடம் கடன் வாங்கி உள்ளார். இந்த கடனை கேட்டு அவர்கள் வீட்டுக்கு சென்ற பெரியசாமி , சந்தியாவிடம் தகராறு செய்து மரக்கட்டையால் அடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சந்தியா தெப்பக்குளம் காவல் துறையில் ,புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய வாலிபர் பெரியசாமியை கைது செய்தனர்.
காமராஜர் சாலையில், மனைவியை தாக்கிய கணவர் கைது!
காமராஜர் சாலை மீனாட்சிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மனைவி சரண்யா (34), இவரது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நிரந்தரமாக வேலை இல்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு காமராஜர் சாலையில் தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டுக்கு சென்ற கணவர் முத்துகிருஷ்ணன் மனைவி சரண்யாவை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் குறித்து சரண்யா தெப்பக்குளம் காவல் துறையில்,புகார் செய்தார். காவல்துறையினர், வழக்குப்பதிவுசெய்து அவரை தாக்கிய கணவர் முத்துகிருஷ்ணனை கைது செய்தனர்.
முன் விரோதத்தில், பெண் மீது தாக்குதல்!
பைக்காரா புது மேட்டு தெரு ஏழாவது தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மனைவி மீனா (36), அதே பகுதியைச் சேர்ந்தவர் காசிமாயன் மகன் கார்த்திக். இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மீனாவை தரகுறைவாக பேசி அவரை கார்த்தி தாக்கி உள்ளார். இந்த சம்பவம் குறித்து மீனா சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அவர் மீது தாக்குதல் நடத்திய கார்த்திகை கைது செய்தனர்.
தீக்குளித்து, மூதாட்டி தற்கொலை!
முனிச்சாலை இஸ்மாயில் புரம் நான்காவது தெருவை சேர்ந்தவர் கல்யாணி அம்மாள் (80), இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்தவர் வீட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மதுரை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணி அம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மகன் சங்கையா விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து மூதாட்டியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி கண்டித்ததால், மனம் உடைந்த கணவன் தூக்கு போட்டு தற்கொலை!
மதுரை பாண்டியன் நகரை சேர்ந்தவர் துரைசாமி (53), இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது .தினமும் குடித்துவிட்டு வருவதால் மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மணமடைந்த துரைசாமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி நாகரத்தினம் கரிமேடு போலீசில் புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை திட்டத்தில், பதுங்கி இருந்த வாலிபர் கைது!
கீரைத்துரை காவல் உதவி ஆய்வாளர்திரு. கருப்பசாமி, இவர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பள்ளிவாசல் சந்திப்பில் சென்றபோது அரிவாளுடன் பதுங்கி இருந்த வாலி வரை பிடித்தார். அவரிடம் விசாரித்த போது அவர் கொலை செய்யும் திட்டத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் விசாரித்த போது மேல அனுப்பானடி சேர்ந்த கண்ணன் மகன் முருகன் என்ற ஏணி மண்டையன் (24), என்று தெரியவந்தது . யாரை கொலை செய்ய பதுங்கி இருந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி