ஆயுதங்களுடன், வாலிபர் கைது!
மதுரை : கீரைத்துரை காவல் ஆய்வாளர் திரு. சந்தானபோஸ், இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் சிந்தாமணி ரோடு காமாட்சி அம்மன் கோவில் தெரு கண்ணன் காலனி சந்திப்பில், சென்றபோது சந்தேகப் படும்படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து அவரிடம் சோதனை நடத்தினார். அப்போது போது அவர் பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த வாலிபர் சிந்தாமணி ரோடு காமாட்சி அம்மன் கோவில் தெரு செந்தில்குமார் மகன் பிரகாஷ்ராஜ் எந்த பிரகாஷ் (24), என்று தெரிய வந்தது .அவரை கைது செய்து எதற்காக எந்தத் திட்டத்தில் அவர் பதுங்கி இருந்தார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர், தற்கொலை!
ராமநாதபுரம் தெற்குதரவையை சேர்ந்தவர் வீரபாண்டி மகன் மணிகண்டன் (23,) இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் மதுரை காமராஜர் சாலை வடக்கு தெருவில் இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய அப்பா வீரபாண்டி இது குறித்து கீரைத்துரை காவல்துறையில் ,புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி