முன்னாள் ராணுவ வீரர் மயங்கி விழுந்து பலி.
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழே கோட்டையை சேர்ந்தவர் திரு.பால்ராஜ் 64. இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் கப்பலூர் தொழிற்பேட்டையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது திருமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே சென்று மயங்கி விழுந்து பலியானார் இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் தெப்பக்குளத்தில் தொழிலாளி மூழ்கி பலி.
மதுரை: மதுரை அருகே கோயில்தெப்ப குளத்திற்கு குளிக்க சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாதவூர் கீழத் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம்33. இவர் சில்வர் பட்டரை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று திருவாதவூர் திருமலைநாதர் கோயில் தெப்ப குளத்திற்கு குளிக்க சென்றவரை காணவில்லை.
அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. தெப்பக்குளம் அருகே அவர் ஓட்டிச் சென்ற பைக் நின்றதை உறவினர்கள் கண்டனர்.
பின்னர் தெப்பக் குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அவரை தேடி பார்த்த போது தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் அவருடைய உடல் மீட்கப்பட்டது .இந்த சம்பவம் தொடர்பாகமேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டு வாசல் முன்பு நிறுத்தி இருந்த இரண்டு பைக்குகள் திருட்டு.
மதுரை அக் 5 வீட்டு வாசல் முன்பு நிறுத்தி இருந்த இரண்டு பைக்குகள் வெவ்வேறு சம்பவங்களில் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் நிலையூர் ரோடு மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் 32. இவருக்கு சொந்தமான ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை வீட்டு வாசல் முன்பாக நிறுத்தி இருந்தார்.அங்கு நிறுத்தியிருந்த பைக்கை மர்ம ஆசாமி திருடிச் சென்று விட்டார்.
இந்த திருட்டு தொடர்பாக பாண்டியராஜன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
மற்றொரு திருட்டு
ஆனையூர் கணபதி நகர் முதல் தெரு சேர்ந்தவர் கலையரசன் 26. இவருக்கு சொந்தமான ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை வீட்டு வாசல் முன்பாக நிறுத்தி இருந்தார்.
இந்த பைக்கையும் மர்ம ஆசாமி திருடிச் சென்றுவிட்டார். இந்த திருட்டு தொடர்பாக கலையரசன் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
டவுன் பஸ்ஸில் அடுத்தடுத்து பணம் திருட்டு 2 பெண்களிடம் கைவரிசை.
மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பஸ்சில் இருந்த இரண்டு பெண்களிடம் அடுத்தடுத்து கைவரிசை காட்டி பணம் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் .
மதுரை அருகே திரளி பச்சைக்கொப்பிரான்பட்டியைசேர்ந்தவர் செல்வி 40 . இவர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஊருக்கு செல்வதற்காக டவுன் பஸ்ஸில் அமர்ந்திருந்தார்.
இவர் பேக்கில் வைத்திருந்த பணம் ரூபாய் நான்காயிரத்தை மர்ம ஆசாமி திருடி விட்டார் .இது தொடர்பாக செல்வி திடீர்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியைதேடி வருகின்றனர்.
இவரைப்போல திருமங்கலம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர்வசிலாபானு 63. இவரும் பெரியார் பேருந்து நிலையத்தில் பஸ்சில் அமர்ந்துஇருந்த போது மர்ம நபர்கள் இவர் வைத்திருந்த ரூபாய் 1100 ,செல்போன் ஒன்றையும் திருடி விட்டனர்.
இந்த திருட்டு தொடர்பாக இருவரும் திடீர்நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்து அடுத்து ஒரே நேரத்தில் திருடிகைவரிசை காட்டிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
தீராத வயிற்று வலியால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை.
மதுரை: மதுரை கே. புதூர் ராம லட்சுமி நகர் முதல் தெரு சேர்ந்தவர் மதியழகன் 65. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. இதனால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார்.ஆனால் குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்த மதியழகன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதுகுவலியால் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை.
மதுரை: மதுரை வில்லாபுரம் வேலுப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் 55 இவருக்கு திடிரென்று முதுகு வலி ஏற்பட்டது. அதற்கான சிகிச்சையும் பெற் றுவந்தார்.
ஆனால் வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.இதனால் விஷம் குடித்து மயங்கிக்கிடந்தார். இவரை ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் அரசுக்கு கோரிக்கை.
மதுரை: தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் நல் வாழ்வு நலச்சங்க மாநில தலைவர் பிரபாகரன் மாநில செயலாளர் கார்த்திகேயன் மற்றும் கமல் ராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது. தமிழ்நாட்டில் இரண்டு விதமான விற்பனை முறைகள் நடைமுறையில் உள்ளன.
ஒன்று எம்என்சி மற்றொன்று எப்எம்சிஆகும். இந்த இரண்டு விற்பனையை நிறுவனங்களிலும் ஆயிரக்கணக்கான விற்பனை பிரதிநிதிகள் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான வேலை பாதுகாப்போ முறையானசம்பளம் வழங்கப்படவில்லை .குறைந்தபட்ச சம்பளம் தினப்படி மற்றும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை விற்பனைப் பிரதிநிதிகளுக்கு துறை சார்ந்த பயிற்சி அளிப்பது .வேலையின்போது ஏற்படும் இழப்புகளுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து இழப்பீடு வழங்கவேண்டும்.
நிறுவனங்களிலிருந்து சம்பளம் தினப்படி மற்றும் பயணப்படி பேசி வாங்கி கொடுப்பது அனைத்து நிறுவனங்களுக்கும் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு கட்டாயமாக பிஎஃப் மட்டும் இஎஸ்ஐ பிடித்த செய்ய வேண்டும்.
நிறுவனங்களின் அனைத்து விற்பனை பிரதிநிதிகளுக்கு அப்பாயின்மென்ட் மற்றும் ஐடி கார்டு வழங்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒருமுறை நிறுவனங்களை ஒன்றிணைத்து வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தி நடத்தவேண்டும். வருடத்திற்கு ஒரு முறை குறைந்த பட்சம் 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க வேண்டும்.
நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து சங்கத்தை வலுப்படுத்த வேண்டும். ஒரு நிறுவனத்தில் குறைந்தது மூன்று வருடங்களுக்கு மேல் பணியில் இருக்கும் நபர்களுக்கு பதவி உயர்வு தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழ்நாடு விற்பனை பிரதிநிதிகள் நல்வாழ்வு சங்கம் முன்வைக்கிறது.
இதை வலியுறுத்தி சென்னையில் வருகிற 17-ஆம் தேதியன்று மாநாடு ஒன்றை நடத்த இருக்கின்றோம் அந்த மாநாட்டில் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
அவர்களிடம் ஏற்கனவே எங்கள் கோரிக்கையை வைத்துள்ளோம் .தமிழக அரசு கனிவுடன் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்