கே.புதூரில் பெண்ணிடம், தாலிச்செயின் பறிப்பு!
மதுரை : கே. புதூர் இ எம் ஜி நகர் 2வது தெரு மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயராணி 60. இவர் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற இரண்டு ஆசாமிகள் அவர் அணிந்திருந்த ஆறரைப்பவன் தாலி சங்கிலி ,தங்க காசு, தங்க குண்டு இவைகளை பறித்து ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து விஜயராணி கே புதூர் போலீசில் புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின் பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
புற்றுநோயால், அவதிப்பட்டவர் பலி!
விளக்குத்தூண் கரிஷ்மா பள்ளிவாசல் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் சந்தானம் (67),இவர் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மகள் சகுந்தலா கொடுத்த புகாரில் விளக்கத்தூன்காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவறி விழுந்த, முதியவர் பலி!
தெற்கு மாசி வீதியை சேர்ந்தவர் விவேகானந்தன் (61), இவர் வீட்டின் முதல் மாடியில் நின்றவர் திடீரென்று தவறி விழுந்தார். இதில் பலமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து தெற்கு வாசல் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து முதியவரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில், நடந்து சென்றவர் பலி!
மதுரை புது விளாங்குடி வாழவந்தான் தெருவை சேர்ந்தவர் செல்வம் (45), இவர் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் எதிரே நடந்து சென்ற போது திடீரென்று மயங்கி விழுந்து பலியானார். இந்த சம்பவம் குறித்து மனைவிமலர்விழி கொடுத்த புகாரில் கரிமேடு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து செல்வத்தின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை!
உலகனேரி அம்பலகாரன்பட்டியை சேர்ந்தவர் முருகன் மனைவி அமுதா (24), இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அத்தை ஞானாம்பாள் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அமுதாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில், பெண் பலி!
மீனாட்சி நகர் தாமரை தெருவை சேர்ந்தவர் பிரமிளா (47), இவர் அருப்புக்கோட்டை மெயின் ரோடு சிந்தாமணி செக் போஸ்ட் அருகே மொபட் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயம் அடைந்த பிரமிளா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து தனியார் பஸ் ஓட்டுனர் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி செவல்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (39) என்பவர் மீது போக்குவரத்து பதனாய்வு பிரிவு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி