தெப்பக்குளத்தில் மூழ்கி பெண் பலி ,3 பேர் தற்கொலை!
மதுரை : மதுரை நவ 4 தெப்பக்குளத்தில் மூழ்கி பெண் பணியானது உட்பட வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்திரப்பட்டி தொண்டமான் பட்டியை சேர்ந்தவர் செல்வம் (57), இவர் மதுரை மருத்துவக் கல்லூரி பி.ஜி ஹாஸ்டலில் பணியாற்றி வந்தார். இவருக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று குணமடையவில்லை. இதனால் மனமுடைந்து இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி தமிழ்ச்செல்வி மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவனியாபுரத்தில் தற்கொலை
அவனியாபுரம் பெரியசாமி நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் நாராயணன் (67), இவர் அந்தபகுதியில் உள்ள கோவில் அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய மனைவி கொடுத்த புகாரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை
வண்டியூர் வாசுகி தெருவை சேர்ந்தவர் ராமர் மனைவி முத்துராக்கு 45. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் தற்கொலை செய்ய முடிவு செய்து தெப்பக்குளத்தில் தண்ணீரில் குதித்து மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.இந்த தகவல் அறிந்த தெப்பக்குளம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம்குறித்து வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே கேட்டருகே புகையிலை பண்டல்கள், 3 பேர் கைது!
ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் திரு. கதிர்வேல், இவர் எம்.கே. புரம் ரயில்வே கேட்டருகே சந்தேகப்படும் படியாக சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தார். அந்த ஆட்டோவில் தடை செய்யப்பட்ட 156 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து அதை கடத்திய மாடக்குளம் பெரியார் நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் ரஞ்சித் குமார் (34) ,தெற்கு வாசல் சப்பானி கோவில் குறுக்கு தெருவை சேர்ந்த ரவிசங்கர் (40), வெங்கடாசலபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (47), ஆகிய மூவரையும் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து விற்பனை செய்த பணம் 10 ஆயிரத்து 450,மூன்று செல்போன்களையும் பறிமுதல் செய்தார்.
தத்தனேரியில் பதுங்கி இருந்த 7பேர் கைது போலீஸ் அதிரடி!
செல்லூர் காவல் ஆய்வாளர் திரு. ஜான், இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். தத்தனேரி வயல் காட்டு பகுதியில் சந்தேகப்படும்படியாக சிலர் பதுங்கி இருப்பதாக அவருக்கு தகவல் தெரிவித்தனர் .அவர் போலீசார் உடன் சம்பவத்திற்கு சென்று தத்தனேரி வயல்காட்டு பகுதியில் பதுங்கி இருந்த வாலிபர்களைபிடித்தார். அவர்களிடம் சோதனை செய்தார். அவர்கள் இரண்டு வாள்கள் வைத்திருந்தனர். அவற்றையும் இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தார் . பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் தத்தனேரி கீழ வைத்தியநாதபுரம் வேல்சாமி மகன் மருது பாண்டியன் என்ற மருது (30), என்று தெரியவந்தது அவரை கைது செய்தார். அவருடன் இருந்த மூன்று பேர் போலீசார் சுற்றி வளைத்த போது தப்பி ஓடி விட்டனர் . அவர்களை தேடி வருகின்றனர்.
கே புதூரில் காவல் ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன், இவர் காந்தி ஜவஹர்புரம் ஒயின்ஷாப் எதிரே பதுங்கிஇருந்த அழகர்கோவில் மெயின்ரோடு ரவிமகன் அந்தோனி (38), பெருங்குடி மகாலிங்கம் மகன் முருகன் (23), அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கருமலை (23), மாரிமுத்து மகன் இருளப்பன் (23) ,பால்பாண்டி மகன் பாண்டியராஜன் 23, கணேசன் மகன் பழனி முருகன் (22) என்று தெரியவந்தது இவர்கள் ஆறு பேரையும் கைது செய்தார்.அவர்களிடமிருந்து 2வாள்கள் பைக் ஒன்றையும் பறிமுதல் செய்தார்.
போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை ஒருவர் கைது!
சென்னை வேப்பேரி செல்லப்பா தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (56) இவருக்கு சொந்தமான இடம் மதுரையில் உள்ளது. இந்த இடத்தை போலி ஆவணம் தயாரித்து பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த பழனிவேல் (69), அவருடைய மகன் சுந்தர் உள்பட ஆறு பேர் அந்த நிலத்தை விற்பனை செய்துள்ளனர். இது வெங்கட்ராமனுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலியான ஆவணம் தயாரித்து விற்பனை செய்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து நிலம் விற்பணை செய்த பழனி வேலை கைது செய்தனர்.
விபத்தில் இரண்டு பேர் பலி!
திருப்பரங்குன்றம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் அய்யனார் 59. இவர் பழங்காநத்தம் வ.உ.சி பாலத்தில் பைக்கை ஓட்டிச் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலமாக அடிபட்டு அய்யனார் சம்பவ இடத்திலேயே பணியாளர் .இந்த விபத்து குறித்து பேரையூர் அய்யனார்பட்டியைசேர்ந்த அரசுபஸ்டிரைவர் ராஜா 40 என்பவர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லாபுரத்தில் விபத்து:
கீரைத்துறையை சேர்ந்தவர் இருளாண்டி மகன் ஜெயக்குமார் 25. இவர் அருப்புக்கோட்டை மெயின் ரோடு வில்லாபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் .அப்போது தூத்துக்குடி மணி நகர் 4வது தெருவை சேர்ந்த சண்முகம் பிள்ளை 51 என்பவர் ஒட்டி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி