வியாபாரியை அரை நிர்வாணமாக்கி தாக்குதல் 5 பேர் கைது!
மதுரை : காமராஜர் சாலை ரசாயன பட்டறை தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சுந்தர் (27), இவர் நுங்கு வியாபாரம் செய்து வருகிறார். அனுப்பானடி பஸ் ஸ்டாப் அருகே நுங்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது வாகனம் அனுப்பானடி அம்பேத்கர் நகர் போஸ் மகன் செந்தில்குமார் (20) என்பவருடைய வாகனத்தின் மீது மோதியது. இதனால் செந்தில்குமார் ஆத்திரமடைந்தார். சுந்தரிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றியது, செந்தில்குமாருடன் அவருடைய சகோதரர்கள் செல்வகுமார் ,அருண்குமார், மற்றும் அழகர் மகன் கார்த்திக் பிரபு அனுப்பானடி முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த காமராஜர் மகன் தீபக் ராஜா ஆகியோர் சுந்தரை ஆபாசமாக பேசி தாக்கி காலால் எட்டி உதைத்தனர். மேலும் அவருடைய உடைகளை அவிழ்த்து அரை நிர்வாணம் ஆக்கி தாக்கியுள்ளனர் .இந்த சம்பவம் குறித்து சுந்தர் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய அண்ணன் தம்பிகளான செந்தில்குமார், செல்வகுமார், அருண்குமார், மற்றும் கார்த்திக் பிரபு ,தீபக் ராஜா ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கே. புதூரில் 5 பேர் கைது!
காந்திபுரம் நான்காவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குட்டை பாண்டி மகன் ராஜா (39), இவர் கே புதூர் காந்திபுரம் அருகே கண்மாய்கரை கிழக்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அவரை ஐந்து வாலிபர்கள் வழிமறித்து கத்தி முனையில் மிரட்டினர். அவரிடம் இருந்த ரூ 550ஐ வழிப்பறி செய்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து ராஜா கே புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கே. புதூர் காந்திபுரம் நான்காவது தெரு ராமு மகன் பிரகாஷ் (23), பாஸ்கரன் மகன் மணிகண்டன் என்ற பூனை மணி 19, மருது பாண்டியர் தெரு முத்துப்பாண்டி மகன் சேது பாண்டி (18) ,மருதுபாண்டியர் தெரு சீர்காழி மகன் சிவகுருநாதன் (19), வீரகாளியம்மன் கோவில் தெரு பால்ராஜ் மகன் கார்த்திக் (23) ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளி வாலிபர் தற்கொலை
மதுரை எல்லீஸ்நகர் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் சேர்ந்தவர் சகாயராஜ் மகன் ஆரோக்கிய வினித் (27), இவரால்வாய் பேச முடியாது, காதும் கேட்காது, இவருக்கு திருமணம் ஆகவில்லை .இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் ஆரோக்கியராஜ் வீட்டில் தனியாக இருந்தபோது சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய தாய் ஆரோக்கியமாலா எஸ்.எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாற்றுத்திறனாளி வாலிபர் ஆரோக்கியவினித்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டியின் 16 பவுன் தங்க நகை மாயம்!
கருப்பாயூரணி பாரதிபுரம் முதல் தெருவைச்சேர்ந்தவர் சண்முகவள்ளி (67), இவர் ஆட்டோவில் பயணம் செய்தார் .ரிங் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இறங்கி பார்த்தபோது அவரது பை காணவில்லை.பையில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகளும் மாயமானது .அவருடன் பயணம் செய்த பயணிகள் திருடிவிட்டனரா, அல்லுது மாயமாகிவிட்டதா என்பது தெரியவில்லை .இது குறித்து சண்முகவள்ளி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மாயமானது குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி