மத்திய சிறைச்சாலை முன்பு, குப்பை தொட்டியில் துப்பாக்கி!
மதுரை : மதுரை புதுஜெயில் ரோடு பகுதியில், மத்திய சிறை அமைந்துள்ளது. சிறைவாசலின் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இருவர் குப்பை தொட்டியை சுத்தம் செய்தபோது குப்பைத்தொட்டிக்குள் பையில் துப்பாக்கி ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் அருகில் உள்ள காவலர்களிடம் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறையினர் துப்பாக்கியை எடுத்துசென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், குப்பைத்தொட்டியில் கிடந்த துப்பாக்கி ஏர் கன் துப்பாக்கி வகையை சார்ந்தது எனவும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு நிறைந்த சிறைவாசலில் எவ்வாறு துப்பாக்கி கொண்டுவரப்பட்டது. என்ற அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர். கைதிகள் யாரும் கொண்டு வந்துள்ளனரா? இல்லை சாலையில் சென்றவர்கள் யாரும் துப்பாக்கியை வீசி சென்றுள்ளனரா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். மத்திய சிறைவாசலில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழிப்பறியில், வாலிபர் கைது!
ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகேசன் (18), இவர் பாரதியாரோடு மணிகண்டன் தெரு சந்திப்பில் சென்ற போது அவரிடம் இருந்து ரூ 15,ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மற்றொரு வாலிபர் பறித்துச் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து முருகேசன் ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையில், புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அவரிடம் செல் பறித்த வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சதீஷ்குமார் மகன் சபரி ராஜன் (18), என்ற வாலிபரை கைது செய்தனர்.
சாக்கடை தகராறில் மோதல்,3 பேர் கைது!
சின்ன அனுப்பானடி சோனையா நகரை சேர்ந்தவர் ஆனந்தி (47), அதே பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் பாண்டி (41), இவர்களுக்குள் சாக்கடைநீர் செல்வது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் பாண்டி அவரது மகன் (17), வயது சிறுவன் மனைவியை நிர்மலா ஆகிய மூவரும் ஆனந்தியை கல் மட்டும் மறக்கட்டையால் தாக்கி உள்ளனர். இந்த தாக்குதல் குறித்து ஆனந்தி கீரைத்துரை காவல் துறையில், புகார் செய்தார். காவல்துறையினர் , வழக்கு பதிவு செய்து மகேஷ் பாண்டி அவரது மகன் மனைவி மூவரையும் கைது செய்தனர்.
இளம்பெண்ணை பின் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!
பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (46), மாடக்குளம் ரோஜா தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் தீனதயாளன் (19), இவர் மணிகண்டனின் மகளை பின் தொடர்ந்து சென்று அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் அவரை மிரட்டி தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் தந்தை சுப்பிரமணியபுரம் காவல் துறையில், புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து வாலிபர் தீன தயாளனை கைது செய்தனர்.
மனு எழுதும் பெண், எழுத்தாளர் மீது தாக்குதல்!
மேலூர் கள்ளம்பட்டி சூரைக்குண்டுவை சேர்ந்தவர் பழனியாயி (58), இவர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே அமர்ந்து மனு எழுதக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் ஒத்தக்கடை வவ்வால் தோட்டத்தைச் சேர்ந்த முருகன் (45), என்பவர் கலெக்டரிடம் கொடுப்பதற்காக மனு எழுதச்சொன்னார். அதற்கு பழனியாயி ரூ 250 கூலி கேட்டுள்ளார் .கூலிஅதிகமாக இருக்கிறது என்று கூறி அவர் மறுத்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பழனியாயி காவல்துறையினரை கூப்பிட்டுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த முருகன், பழனியாயியை அவதூறாக பேசி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் , வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய முருகனை கைது செய்தனர்.
இரண்டு சிறுமிகளுக்கு திருமணம்,சிஇரண்டு பேர் கைது!
செல்லூர் மேலதோப்பு சீமான் ரோட்டை சேர்ந்த (17) சிறுவன் போஸ் வீதி மூன்றாவது தெருவை சேர்ந்த (16) வயது சிறுமியை காதலி துவந்துள்ளார் .பின்னர் அவரை சம்பவத்தன்று திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் டாக்டர் விஜய சரவணன் இந்த சம்பவம் குறித்து ஞ தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் , வழக்கு பதிவு செய்து சிறுமையை திருமணம் செய்த சிறுவனை கைது செய்தனர்.
மற்றொரு திருமணம் .
செல்லூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் யுவராஜ் (19), இவர் அதே பகுதியைச் சேர்ந்த (17), வயது சிறுமியை ஒரு வருடமாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் டாக்டர் விஜய சரவணன் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் , வழக்கு பதிவு செய்து வாலிபர் யுவராஜை கைது செய்தனர்.
லாரிக்குள் தொழிலாளி, தூக்கு போட்டு தற்கொலை!
ஈரோடு கருங்கல்பாளையம் சிந்தன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (50), இவர் மதுரை பறவை காய்கறிமார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். அங்கு காய்கறி ஏற்றி வந்தலாரி நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரிக்குள் செல்வராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்த கூடல் புதூர் காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூன்று பேர் தற்கொலை!
கே .புதூர் தேசிய விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகசுப்பிரமணியன் மகன் பாண்டீஸ்வரன் (23), இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவருடைய அம்மா சத்தியா கே. புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து பாண்டீஸ்வரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொக்கிகுளத்தில் தற்கொலை
சொக்கிகுளம் பெசண்ட் ரோட்டை சேர்ந்தவர் சித்திரை அழகன் மகன் அருண்பாண்டியன் (36), இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. ஆறு மாதத்திற்கு முன்பு விபத்தில், சிக்கி இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காமராஜர்புரத்தில் தற்கொலை
காமராஜர்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் கார்த்திக் (37), இவர் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவருடைய அம்மா கீரைத்துறை காவல் நிலையத்தில், புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்து வட்டி கேட்டு மிரட்டல், முதியவர் கைது!
மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் கணபதி (51), இவர் கிருஷ்ணராய தெப்பக்குளத்தைச் சேர்ந்த சண்முக ரத்தினம் (63), என்பவரிடம் 2015 ஆம் ஆண்டு ரூ மூன்று லட்சம் வட்டிக்கு வாங்கி உள்ளார். அதற்கு ஒரு லட்சம் ஒரு லட்சம் மட்டும் வட்டி செலுத்தி உள்ளார். ஆனால் இந்த வட்டி போதாது என்று கூடுதலாக கந்துவட்டி கேட்டு மிரட்டிஉள்ளார். இந்த சம்பவம் குறித்து கணபதி திலகர் திடல் காவல் நிலையத்தில், புகார் செய்தார்.காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து கந்து வட்டி கேட்டு மிரட்டிய சண்முக ரத்தினத்தை கைது செய்தனர்.
8கிலோ கஞ்சாவுடன், ஏழு பேர் கைது!
மதிச்சியம் காவல் ஆய்வாளர் திரு.செல்வகுமார், இவர் மதிச்சியம் வடக்கு தெருவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பைக்டன் இருந்த ஆறு பேரை சந்தேகித்து அவர்களை சோதனை செய்தார். சோதனையில் அவர்கள் இரண்டு பெரிய வாளை மறைத்து வைத்திருந்தனர். பைக்கில் எட்டு கிலோ கஞ்சாவும் இருந்தது. அவர் அந்த பைக்கையும், வாள் இரண்டையும் கஞ்சாவையும் பணம் ரூ 11 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பூந்தமல்லி நகர் கல்யாணசுந்தரம் 5வது தெரு சந்தான மகன் பாலகிருஷ்ணன் 29, திருமங்கலம் அலப்பலசேரி தெற்கு தெருவை சேர்ந்த ஈஸ்வரன் மகன் சதீஷ் என்ற வெங்கடேஸ்வரன் (32), மானாமதுரை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் அண்ணாமலை (24), கே புதூர் ஆவின் நகர் சர்வேயர் காலனி சேர்ந்த மகேஸ்வரன் (40), ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் மல்லிகா அர்ஜுன் (26), ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் ஒன்றாவது தெருவை சேர்ந்த காமாட்சி மகன் தினேஷ் (24), ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
திலகர் திடல்காவல் ஆய்வாளர் திரு.சங்கர், இவர் ராஜா மில் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் அந்தப் பகுதியில் கஞ்சாவுடன் பதுங்கி இருந்த பேச்சியம்மன் படித்துரை சுப்ரமணி அக்ரஹாரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் முருகன் (39), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவையும் ரூ 500ஐயும் பறி முதல் செய்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி