பிரபல ஜவுளி கடைகளில் குழந்தைகளை குறிவைத்து கைவரிசை
செல்லூர் அகிம்சாபுரம் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (60), இவர் ஆழ்வார் புரத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு தனது பேத்தியுடன் சென்றிருந்தார். அவர் மூன்றாவது தளத்திற்கு சென்று துணி வாங்கிக் கொண்டிருந்த போது அவருடன் சென்ற காணவில்லை. பின்னர் படிக்கட்டு பகுதியில் பேத்தி நின்று கொண்டிருந்தார் .அப்போது பார்த்தபோது அவர் அணிந்திருந்த அணிந்திருந்த அரைப்பவுன் வளையல் திருடு போயிருந்தது தெரியவந்தது. குழந்தையை நைசாக தூக்கிச் சென்று படிக்கட்டில் வைத்து மர்மநபர் திருடியதும் தெரிய வந்தது. இது குறித்து பெரியசாமி மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜவுளி கடையில் உள்ள CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி செயின் பறித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.
மாட்டுத்தாவனி அருகே செயின் திருட்டு
சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் துரைசாமி (63), இவர் தன் பேத்தியுடன் மாட்டுத்தாவனி அருகே உள்ள பிரபல ஜவுளி கடைக்கு துணிகள் வாங்க சென்றிருந்தார். அப்போது அவருடைய பேத்தி அணிந்திருந்த ஒரு பவுன் எடையுள்ள வலையலும் செயினும் காணவில்லை இது குறித்து துரைச்சாமி மாட்டுத்தாவனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டத்தில் யாரும் குழந்தையை கடத்திச் சென்று திருடிவிட்டார்களா, அல்லது மாயமானதா என்பது குறித்து CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் மாத்திரைகள் தின்று தற்கொலை!
கரிமேடு பொன்னகரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (73), இவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் துடித்தார். இந்த நிலையில் ஆரப்பாளையத்தில் ஹோட்டல்ஓட்டல் ஒன்றுக்குள்சென்று மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மனைவி பிரபாவதி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சர்வேயர் காலனியில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்
மதுரை அருகே மாங்குளம் மீனாட்சிபுரம் காலனியை சேர்ந்தவர் தவிடு முத்து (32), இவர் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவர் சர்வேயர் காலனியில் மருத்துவமனை அருகே பயணிக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற எஸ் கொடிக்களம் பாரத் நகர் நான்காவது தெருவை சேர்ந்த செந்தில் மகன் நாக வேலு (31) என்பவர் ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பேசிவிட்டு தருவதாக கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டார் .இதனால் ஆத்திரமடைந்த நாகவேலு ஆட்டோ டிரைவரை ஆபாசமாக பேசி கல்லால் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து தவிடுமுத்து திருப்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய வாலிபர் நாகவேலுவை கைது செய்தனர்.
பாரில் மது அருந்துவதில் தகராறு
விராதனூர் முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் செல்லப்பா மகன் சிக்கந்தர் பாஷா என்ற பாபு (33), ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவை சேர்ந்தவர் சேதுராமன் மகன் பதாரி என்ற நீலமேகம் (35),இவர்கள் இருவரும் டாஸ்மார்க் பாரில் மது அருந்தும் போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வைகைஆற்றில் எம்.ஜி.ஆர், பாலத்தில் அமர்ந்திருந்த சிக்கந்தர் பாஷாவை நீலமேகம் ஆபாசமாக பேசி பாலத்தில் இருந்து கீழே தள்ளினார். இதில் சிக்கந்தர் பாஷாவுக்கு பலமாக அடிபட்டது. அவரை சிசைக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து சிக்கந்தர் பாஜா திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கீழே தள்ளிய வாலிபர் பதாரி என்ற நீல மேகத்தை கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி