மதுரையில் எட்டு இடங்களில் நிறுத்தியிருந்த பைக்குகள் திருட்டு போலீஸ் விசாரணை
மதுரை: மதுரையில் எட்டு இடங்களில் நிறுத்தி வைத்திருந்த பைக்குகளை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கே. புதூர் சர்வேயர் காலனி அய்யாவு தேவர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் 52. இவர் வீட்டில் முன்பாக நிறுத்தி இருந்த ரூ 5ஆயிரம் மதிப்புள்ள பைக்கை மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார் .இந்த திருட்டு குறித்து சீனிவாசன் திருப்பாலை போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை தெப்பக்குளம் புது ராம்நாடு ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் தினேஷ்குமார் 26. இவர் காந்தி மியூசியம் அருகே தான் ஓட்டிச் சென்ற பத்தாயிரம் மதிப்புள்ள பைக்கை நிறுத்தி இருந்தார். இந்த பைக்கை மர்ம ஆசாமி திருடச் சென்றுவிட்டார் .இது குறித்து தினேஷ் குமார் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.
செல்லூர் பகத்சிங் ரோடுவை சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ்குமார் 26 .இவர் வடக்கு வெள்ளிவீதியில் உள்ள ஒரு செல் விற்பனை நிலையத்திற்கு முன்பாக தனது பைக்கை நிறுத்தி இருந்தார். அந்த பைக்கை மர்ம சாமி திருடிச் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து சதீஷ்குமார் திலகர்திடல் போலீசில் புகார் செய்தார்.
எஸ் எஸ் காலனி ஜவகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் குருமூர்த்தி மகன் வெங்கடேஷ் பிரசாத் 25 இவர் வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த ரூ20ஆயிரம் மதிப்புள்ள பைக்கை திருடிச்சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் பிரசாத் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார் .
தனக்கன்குளம் வெங்கல மூர்த்தி நகரை சேர்ந்தவர் அர்ஜுன் பாண்டி 33 .இவர் திருப்பரங்குன்றம் சர்வீஸ் ரோடு முத்து பாலம் அருகில் ரூ 15 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை நிறுத்தி இருந்தார் .இந்த பைக்கை மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார். இது குறித்து அவர் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார் .
மதுரை பாசிங்காபுரத்தைச்சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் தண்டபாணி 39. இவர் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலை அருகே நிறுத்தியிருந்த ரூ 10,ஆயிரம் மதிப்புள்ள பைக் திருடுபோய்விட்டது. இது குறித்து தண்டபாணி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.
மதுரை கீழ் மதுரை சி எம் ஆர் ரோடுவை சேர்ந்தவர் அசோக்குமார் மகன் வினோத் குமார் 20. இவர் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த பத்தாயிரம் மதிப்புள்ள பைக் திருட்டு போய்விட்டது. இது குறித்து அவர் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.
அச்சம்பத்து ஏர்குடியை சேர்ந்தவர் முத்துசாமி 35. இவர் சிம்மக்கல் அனுமார் கோவில் அருகே பத்தாயிரம் மதிப்புள்ள பைக்கை நிறுத்தி இருந்தார் .இந்த பைக்கை மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் விளக்கத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தொலைபேசி தேடி வருகின்றனர்.
செல்லூர் அனுப்பானடியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது
மதுரை ஜூலை 1 செல்லூர் வைகை வடகரையில் கஞ்சாவிற்பனை செய்வதாக செல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது . சப் இன்ஸ்பெக்டர் ரீகன் திடீரென்று அங்கு சோதனை செய்தார். அங்கு கஞ்சா விற்பனை செய்த சிவகங்கை மாவட்டம் லாடனேந்தலை சேர்ந்த மாயாண்டி மகன் சீனிவாசன் 21,கொன்னவாயன் சாலை பிரியதர்ஷினி நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அரசு35 இருவரையும் கைது செய்து அவர்கள் விற்பனை செய்த கஞ்சா 200 கிராமை பறிமுதல் செய்தனர்.
அனுப்பானடியில் பெண் கைது
அனுப்பானடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி பஞ்சு 39. இவர் வீட்டில்வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது கீரைத்தரை சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி அவரை பிடித்து கைது செய்தார். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவையும் விற்பனை செய்த பணம் ரூ 550 ஐயும்பறிமுதல் செய்தார்.
ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரத்தில் குடிபோதையில் தாயை தாக்கிய மகன் கைது
மதுரை ஜூலை 1 ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் மூன்றாவது தெரு வ உ சி தெருவை சேர்ந்தவர் செல்வி 40. இவருடைய மகன் குருநாதன் என்ற சிவா 21. சிவா தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக கொண்டிருந்தார். அவர் தினமும் தாயிடம் தகராறில் ஈடுபட்டார். சம்பவத்தன்றும் குடிபோதையில் வந்து தாய் செல்வியுடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து செல்வி ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாயை தாக்கிய மகன் சிவகுருநாதனை கைது செய்தனர்.
வயதில் மூத்த பெண்ணுடன் காதல் கண்டித்த சகோதரனுக்கு அடி உதை, சிறுவன் கைது.
மதுரை ஜூலை 1 வயதில் மூத்த பெண்ணுடன் காதலலை கொண்ட ச கண்டித்த சகோதரனை இரும்புக்கம்பியால் அடித்த சிறுவனை போலீசார் கைது செய்தனர் . தந்தை பெரியார் நகரச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவன் தன்னிடம் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை காதலித்து உள்ளார். இதை அறிந்த அந்த பெண்ணின் சகோதரர் அந்த சிறுவனை கண்டித்துள்ளார். இதன் காரணமாக முன்விரோதத்தில் அந்த பெண்ணின் சகோதரனை சிறுவன் வழிமறித்து சரமாரியாக இரும்புக் கம்பியால் அடித்து தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
வைகை தரைப்பாலத்தில் கத்தி முனையில் வழிப்பறி மூன்று பேர் கைது.
மதுரை ஜூலை 1 வைகை வடகரை தரைப்பாலத்தில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
செல்லூர் முதலியார் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் 43. இவர் வைகை வடகரை தரைப் பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த நான்கு பேர் கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 970ஐ வழிப்பறி செய்துவிட்டனர் .இந்த சம்பவம் குறித்து பவுன்ராஜ் செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லூர் கீழ தோப்புவை சேர்ந்த அய்யாதுரை மகன் சிவா 25, தத்தனேரி பாரதி நகரை சேர்ந்த முத்துப்பாண்டி என்ற மீன் முள் முத்துப்பாண்டி 22, உசிலம்பட்டி கருமாத்துரை சேர்ந்த விவேக் என்ற கூல் பானை 25 மூவரை கைது செய்தனர் .தப்பி ஓடிய திருமங்கலம் வாயகை குலத்தைச் சேர்ந்த அன்பு வை தேடி வருகின்றனர்.
குடிபோதையில் கோர்ட் வளாகத்துக்குள் புகுந்து ஊழியர்களை ஆபாசமாக திட்டிய வாலிபர் கைது
மதுரை ஜூலை 1 குடிபோதையில் கோர்ட் வளாகத்துக்குள் புகுந்து ஊழியர்களை ஆபாசமாக திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் குமரன் என்ற குமரவேல் 35. இவர் மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் குடிபோதையில் புகுந்து ஜே.எம்.நான்காம்நீதிமன்றம் இரண்டாவது நுழைவு வாயில் அருகே நின்று கோர்ட்டு ஊழியர்களை குடிபோதையில் ஆபாசமாக திட்டி உள்ளார். பலமுறை எச்சரித்தும் அவர் விடவில்லை. தொடர்ந்து திட்டிக்கொண்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து ஜே.எம் .நான்காம் நீதிமன்ற கிளார்க் சந்தோஷ் குமார் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து போதை வாலிபர் குமரன் என்ற குமரவேலை கைது செய்தனர்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திடீர் நெஞ்சு வலிக்கு டிரைவர் பலி
மதுரை ஜூலை 1 மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திடீரென்று நெஞ்சுவலியால் அவதிப்பட்ட டிரைவர் பலியானார்.
கடலூர் மேலரத மூர் கீழத்தெருவை சேர்ந்தவர் மணி 52. இவர் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அதிகாலை பஸ்ஸை இயக்க தயாராக இருந்தார்.இவர் தஞ்சாவூர் பிளாட்பாரத்தில் காத்திருந்தபோது திடீரென்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி மகேஸ்வரி மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் மணியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி