காலாவதியான பிஸ்கட்டுகளை சாப்பிட்ட சிறுவர்களில் ஒருவர் சாவு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில், வீட்டின் அருகே கிடந்த பிஸ்கட்டுகளை சாப்பிட்ட சிறுவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் பகுதியில் வசிப்பவர் சின்னாண்டி, இவரது மகன் குணா 13.இவரும், அவரது நண்பருமான செந்தில் மகன் சசிக்குமார், 11. ஆகிய இருவரும் காலாவதியான பிஸ்கட்டை பாக்கெட்டை, வீட்டின் அருகே எடுத்து சாப்பிட்டார்களாம்.
இதனால், வாந்தி வயிற்றுப் போக்கு இருவருக்கும் ஏற்பட்டது.
இவர்களை, மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலே,குணா இறந்து விட்டார்.
சசிக்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இருவருமே, அலங்காநல்லூர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் என, போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இரும்பு பொருட்களை திருட முயன்ற வேன் டிரைவர் கைது:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பி. மேட்டுப்பட்டியில், சர்க்கரை ஆலையில், வேனில் பழைய இரும்புகளை, வலசை கிராமத்தை சேர்ந்த டிரைவர் முத்து, 37. வேனில் ஏற்றிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து, ஆலையின் செக்யூரிட்டியானவர் போலீஸுக்கு தகவல் கொடுத்தார்.
இது குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து மேலும், விசாரித்து வருகின்றனர்.
வீட்டில் இருந்த ஆட்டுக்குட்டி திருட்டு:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே வீட்டில் இருந்த ஆட்டுக்குட்டியை காணவில்லையென, போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அலங்காநல்லூரையடுத்த, காந்திகிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் பழனிச்சாமி.இவர் வீட்டில் வளர்த்து வந்த வெள்ளாட்டங் குட்டியை காணவில்லையென போலீஸில் புகார் செய்துள்ளார்.
இது குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர், காந்திகிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், 21.வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
