மதுரை : மதுரை திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் அணி எண் 75, 76, 77, 78 மற்றும் 199 நாட்டு நலப்பணித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், முதலாமாண்டை சேர்ந்த 200 மாணவர்களும் இரண்டாமாண்டை சேர்ந்த 200 மாணவர்களும் தன்னார்வலர்களாக சேவை செய்து வருகின்றனர்.பொது மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை உண்டுபண்ணுவதும் தேவையான நேரத்தில் சமூக பணியாற்றுவதும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்களின் நோக்கமாகும். இதன்படி , மூன்று நாட்கள் கல்லூரியின் அருகாமையிலுள்ள வாடிப்பட்டி பொன் பெருமாள் மலை மற்றும் சன்னாசி மலைப்பகுதிகளில் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
மாணவர்களை கல்லூரியின் செயலர் சுவாமிஜி சுவாமி வேதானந்தா , விவேகானந்த பள்ளியின் செயலர் சுவாமிஜி சுவாமி பரமானந்தா மற்றும் குலபதி சுவாமிஜி சுவாமி அத்யாத்மானந்தா மாணவர்களை ஆசிர்வதித்து உழவாரப்பணியினை தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் டி. வெங்கடேசன் முகாம் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் ஜி. அசோக் குமார், முனைவர் கே.ரமேஷ் குமார், எம். ரகு, முனைவர் ஜி.ராஜ்குமார் மற்றும் என். தினகரன் நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர்கள் பி.மாரிமுத்து, முனைவர் கே.பி.ராஜா, வி. குமாரசாமி, முனைவர் எஸ். செல்வராஜ் மற்றும் முனைவர் எஸ். எல்லைராஜா ஆகியோர் மாணவர்களை வழிநடத்தினர். கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு பயிலும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் 200 மாணவர்கள் இந்த முகாமில் தன்னார்வ தொண்டு புரிந்து சேவை மனப்பான்மையை வளர்த்துக் கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி