மதுரை : மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், மேலவளவு காவல் நிலைய சரகம், கிடாரிப்பட்டி லதா மாதவன் இன்ஜினியரிங் கல்லூரியில், மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் லதா மாதவன் இன்ஜினியரிங் கல்லூரி இணைந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சிவபிரசாத் இ.கா.ப, அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் லதா மாதவன் கல்லூரி தாளாளர் திரு.முத்து அவர்கள் மற்றும் மேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு . ஆர்லியஸ் ரெபோனி, ஆகியோர் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மரம் நடும் விழாவும் நடைபெற்றது.

திரு.ரவி