மதுரை : ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளின் திடீர் சோதனையில், திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் கணக்கில் கட்டப்படாத 66 ஆயிரம் ரூபாய் பணம் தாசில்தார் உட்பட 3 மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில், நேற்று மாலை 4 மணியளவில் மதுரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி சத்தியசீலின், தலைமையிலான 15க்கும் மேற்பட்ட குழுவினர் தாலுகா அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் மூடப்பட்டு, பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்காமல் தொடர்ந்து பல்வேறு ஆவணங்கள் வழங்கியது தொடர்பாக , தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களிடம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் கேள்வி எழுப்பி பணம் ஏதும் கைமாற்றப்பட்டது என்பது குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் கட்டப்படாத 66 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் பணம் வைத்திருந்த தாசில்தார் உதவியாளர் சகாயராணி, நில அளவையர் ரகுபதி, மற்றும் தாசில்தார் பார்த்திபன் ஆகிய மூவரிடமும் மதுரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி சத்யசீலன் தலைமையிலான போலீசார் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று அவர் மீது வழக்கு பதிவு செய்து, கணக்கில் காட்டப்படாத 66 ரூபாய் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி