மதுரை : மதுரை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி ஆனார். மதுரை அருகே சமயநல்லூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் அக்னிஸ்வரன் 32 .இவர் கூலி தொழிலாளியாவார். சம்பவத்தன்றுசமயநல்லூர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி பலியானார்.இதுகுறித்து அவரது தந்தை மதிவாணன் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி