மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் காவல் உட்கோட்டம், ஆஸ்தன்பட்டி காவல் நிலையம் சார்பில், நிலையூரில் காவல் புறக்காவல் நிலையத்தை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் விநோதினி, காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறியது: மதுரை மாவட்டத்தில் குற்றங்களை குறைக்க இரவு நேர ரோந்துகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கிராமங்களில், குற்றங்களை தடுக்கும் நோக்குடன், இரு சக்கர வாகன ரோந்தையூம் போலீஸார் மேற்கொள்கின்றனர். புறக்காவல் நிலையங்கள் திறக்கப்படுவதின் மூலம், குற்றங்களை தடுக்க பெரிதும் உதவும் என்றார்.
