மதுரை : மதுரையில் பல இடங்களில் உள்ள வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை தத்தனேரி பகுதியில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதில் சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் கிருஷ்ணா என்பவரை செல்லூர் காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து சுமார் 31 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர்கள் மதுரையில் உள்ள பல பகுதி களில் உள்ள வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A.வேல்முருகன்