மதுரை : மதுரை மாவட்டம் வலையங்குளம் கிராமத்தில் பல தரப்பட்ட சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் , நேற்று மாலை இது தரப்பட்ட சமூகத்தினர் சேர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தகராறில் வலையங்குளம் அருகே உள்ள சோழங்குருணி கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி மகன் வீரணன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
சம்பவம் அறிந்து அங்கு விரைந்து வந்த பெருங்குடி காவல்துறையினர் பிரேதத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி