மதுரை: பொது வாழ்வில் நேர்மையையும், நாணயத்தையும் வலியுறுத்தும் வகையில் ஹலஞ்சம் இல்லாத இந்தியா, வளமான இந்தியா’ என்ற கருப்பொருளில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் உள்ள, விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் விற்பனை மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால், உதவி ஆணையர், கனக சுப்பிரமணியன் தலைமை வகித்தார். விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் முன்னிலையில் விமான நிலைய அலுவலர்கள் பங்குபெற்றனர். மேலும் அங்கு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

திரு.ஜஸ்டின் சரவணன்