மதுரை: உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், தானப்ப முதலித் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டு அவர்களுடன் நேரம் செலவிட்டு உரையாடப்பட்டது. சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் சாய்ராம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் உணவு பரிமாறும் பணியில் ஈடுபட்டனர். சமூக சேவகர்கள் இல. அமுதன் மற்றும் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் முதியோர் இல்ல பொறுப்பாளர் இந்திரா நன்றி தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















