கிளி பிடிக்க மரத்தில் ஏறிய சிறுவன் தவறி விழுந்து பலி
மதுரை அருகே கிளி பிடிக்க மரத்தில் ஏறிய சிறுவன் தவறி விழுந்து பலியானார் .
மதுரை அருகே மந்தி குளம் கழுவனூரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகன் முத்துக்குமார்13. இவன் வீட்டின் அருகே தென்னை மரத்தில் கூடுகட்டி வாழ்ந்து வந்த கிளியை பிடிக்க மரத்தில் ஏறிய போது தவறி விழுந்தான். இதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சையில் இருந்த சிறுவன் முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான் .இது குறித்து தந்தை முத்துப்பாண்டி கொடுத்த புகாரில் எம். சத்திரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டைவர்ஸ் மனைவி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்ததால் மனமுடைந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுரை டைவர்ஸ் மனைவி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்ததால் மனமுடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மீனாம்பாள் புரத்தைம்அம்பேத்கர்காலனிமுதல்தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் 58 .இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் டிபி நோயால்அவதிப்பட்டுவந்தார்.இந்த நேரத்தில் முதல் மனைவி ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் முத்துகிருஷ்ணன் மீது வழக்கு தொடர்ந்தார். இதனால் மனம் உடைந்த முத்துகிருஷ்ணன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்துசெல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செல்லூரில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த கொத்தனார் தவறி விழுந்து பலி
மதுரை மார்ச்1 கட்டிட வேலை செய்துகொண்டிருந்த போது தவறி விழுந்த கொத்தனார் பலியானது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .
திருப்பரங்குன்றம் நடுத்ததெருவை சேர்ந்தவர் லட்சுமண குமார் 35. கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். செல்லூர்ம் ஸ்டேஷன் ரோட்டில் கட்டிடம் ஒன்றில் இவர் வேலை செய்து கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதில் பலமாக அடிபட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் கொத்தனார் லட்சுமண குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து இவரது மனைவி ஜோதி கொடுத்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சில்லறை தகராறில் டாஸ்மார்க் கேசியருக்கு பாட்டில்அடி போலீஸ் விசாரணை
மதுரை கீரைத்துறை பாம்பன்ரோடுவைச்சேர்ந்தவர் சரவணன்45.இவர் அந்தபகுதியில்உள்ள டாஸ்மார்க்கடையில் கெசியராக வேலைபார்த்துவருகிறார்.இவரதுகடைக்குவந்த மற்றொருசரவணன் மற்றும் உறவினர்கள் நான்குபேர் ஐம்பத்து இரண்டுருபாய்க்கு பதிலாக ஐம்பது ருபாய்கொடுத்தனர்.இதனால் அவர்களுக்குள் வாய்தகராறுஏற்பட்டு சண்டையாக முற்றியது.
இதில்சரவணனும் உறவினர்களும் பாட்டிலால் கேசியர்சரவணனை தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.இந்தசம்பவம் தொடர்பாக கேசியர் கொடுத்தபுகாரில் கீரைத்துறைபோலீசார் வழக்குப்பதிவுசெய்து தாக்கியவர்களை தெடிவருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி