மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபட்டதால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக, பெற்றோர்கள் க வலை அடைந்துள்ளனர். குறிப்பாக, சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம், விநாயகபுரம் காலனியில், கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையால் மரங்கள் ஒடிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கடந்த 4 நாட்களாக அதை, மின்சார வாரியம் சரி செய்யாமல் இருப்பதால், பொதுத் தேர்வு எழுதும்அரசு பள்ளி மாணவர்கள் உட்பட, பலர் மிகுந்த சிரமத்திற்கு, ஆளாகிவருகின்றனர். தொடர்ந்து, மழை பெய்து வருவதால் விஷஜந்துக்கள், உள்ளிட்டவை வீட்டுக்குள் வரும் அபாயம் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக, கொரொனா பேரிடர் காலத்தில் பள்ளி நடைபெறாமல் இருந்ததால், மாணவர்கள் மிகுந்த மனச்சுமையுடன் சென்று வருகின்றனர்.
தற்போது, 12 ஆம் வகுப்புகள், உட்பட அரசு பொதுத் தேர்வுக்கு,படிக்கும் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கை க்குழந்தை, வைத்திருப் பவர்கள் என்ன செய்வதறியாது, திகைத்து வருகின்றனர். 4 நாட்களாக, மின்சாரம் தடைபட்ட சூழ்நிலையில், மின்வாரியம் எந்தவித, நடவடிக்கையும் எடுக்காதது வேதனைக்குரியது. உடனடியாக சரி செய்ய இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி