மதுரை : ஓவியம் என்பது ஏதேனும் ஒரு தோற்றத்தை ஒத்திருப்பது போன்று வரைவதாகும். ஓவியம் என்றால் ஒத்திருப்பது / ஒப்பாகுதல் எனப் பொருள். ஒன்றைப் பற்றியிருப்பது, ஒன்றை ஒத்திருப்பது, ஒன்றை பொருந்தியிருப்பதே ‘ஓவியம்’ என்று சொல்லப்படுகிறது. மனிதன் குகைகளில் வாழ்ந்த கற்காலத்திலேயே ஓவியம் தீட்டத் தொடங்கி விட்டான். கண்ணால் கண்ட ஒரு காட்சியைத் தனது மனதில் பதிய வைத்துக் கொண்டு – அதனைப் பிறர் காணும் வகையில் பாறைகளில் எழுதிக் காட்டி ஓவியத்தைக் கலையாக்கினான். இது போன்ற போட்டிகள் மூலம் குழந்தைகளின் தயக்கம் களையப்படுவதுடன், குழு மனப்பான்மையும் வளரும். மேலும், இந்தப் போட்டி மூலம் குழந்தைகளின் திறமைகள் வெளிப்படும்.
பொதுவாக பெரியவர்களை விட குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இதனை கருத்தில் கொண்டும், கோடை விடுமுறையில் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்படுத்துவதற்காகவும் மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், பெவிக்ரில் (FEVICRYL ACRYLIC COLOURS), SS HAN மருத்துவமனை மற்றும் தங்கமயில் நகை மாளிகை இணைந்து மிக பிரமாண்டமாய் நடத்தும் ஓவியப் போட்டி மதுரை கிழக்கு வெளி தெருவில் வரும் மே 14 ஞாயிறு காலை 10 முதல் 12 வரை நடைபெற உள்ளது. LKG முதல் 12 வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ளலாம் கிரேட் வாரியாக பரிசுகளும் அன்றே வழங்கப்பட உள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திருமதி. நித்யா