மதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு, மனு கொடுக்க வருபவர்களிடம், அலுவலக வாசலில் போலீசார் ,சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வாரம்தோறும், திங்கள் கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு, ஏராளமான பொதுமக்கள் மனுக்களை ஆட்சியரிடம், வழங்குகின்றனர்.
இதில், ஒரு சிலர் கையில் கெரசின் கேனை, மறைவாக கொண்டுவந்து ஆட்சியர் அலுவலக வாசலில் மன்னனை ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர். இதனால், அடிக்கடி பெரும் பரபரப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் நோக்குடன், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர், மனு கொடுக்க வரும் நபர்களையும், அவர்கள் ஓட்டி வரும் வாகனங்களையும், சோதனைக்கு பிறகே ஆட்சி அலுவலர்கள் அனுமதிக்கின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி