மதுரை: மதுரையில் B5 தெற்குவாசல் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் திரு. ஜான், அவர்கள் தெற்கு வெளிவீதியில் அமைந்துள்ள ஜவுளி கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையால் புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலி மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும, பணிபுரியும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள் பற்றியும் அவற்றிலிருந்து எவ்வாறு அவர்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு
மதுரை மாநகர் திருநகர் எல்கைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.பல்கீஸ் அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் POCSO ACT, CHILD MARRIAGE,CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை