மதுரை: மதுரையில் ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட மதுரை காளிமுத்து நகரை சேர்ந்தவர் கார்த்திக் (22). இவர் மீது சில வழக்குகள் உள்ளன. கடந்த வாரம் வழக்கு ஒன்றில் சிறையில் இருந்தவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் இவர் வீட்டின் முன் நின்றிருந்த போது காரில் வந்த 8 பேர் ஓட ஓட விரட்டி வீட்டின் மாடியில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.
இது குறித்து எஸ். எஸ். காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதில் சொக்கலிங்க நகர் 4 வது தெரு சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவருக்கும் கார்த்திக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டதால் இந்த கொலை நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த கொலையில் செல்லப்பாண்டி, சுகபிரகாஷ், பிரகாஷ் என்ற ஷ்யாம் சேகரன், உட்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக மதுரையிலிருந்து
திரு. ஜஸ்டின் சரணனன்.