மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில், கல்லூரி ஒன்றின்
விளையாட்டு திடல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திருப்பரங்குன்றம் சப்-இன்ஸ்பெக்டர் சொர்ணராசுக்கு தகவல் கிடைத்தது. அவர், போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்து அங்கு விற்பனை செய்த தேனி வருசநாடு வால்பாறையை சேர்ந்த பரமன்46, நாகமலை புதுக்கோட்டை மேலக்குயில்குடி மாரியப்பன் மகன் அருண்பாண்டி 21,பைக்காரா அழகு சுந்தரம் நகரைச் சேர்ந்த கண்ணன் 54 ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கரிமேடு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவில் உள்ள கோயில் அருகே கஞ்சா விற்பனை செய்த நியூ எல்லிஸ் நகர் சர்வோதயா மூன்றாவது தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் சோமநாதன் 23. என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 140 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தல்லாகுளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆதிகுண்ட கண்ணன். அவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பீபிகுளத்தில் உள்ள ஒரு ஒயின் ஷாப் அருகே கஞ்சா விற்பனை செய்த செல்லூர் சிவகாமி தெருவைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் கார்த்திக் 20. என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
