மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் ராஜு அவர்கள் தலைமையில், கொரானா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய்,இ.ஆ.ப, மாவட்ட காவல் ஆணையாளர் திரு.டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், இ.கா.ப, மதுரை காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன், மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ். விசாகன், இ.ஆ.ப, அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மரு.சங்குமணி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பி.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்