சென்னை: வடசென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் திருமதி.ஜெயகௌரி அவர்கள் ஆணைபடி, N3 முத்தால் பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுபடி, குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் அன்று இரவு சுமார் 07:30மணி அளவில் முத்தையால்ப்பேட்டை காவல் நிலைய காவலர்கள் தலைமையில், ஸ்டான்லி ரவுண்டானா சிக்னல் அருகில் சிறப்பு வாகன தணிக்கை செய்து கொண்டிருக்கும் போது ,அப்பகுதி வழியே வந்த ஆட்டோ ஓட்டுனர் (TN 0 3 W 41 72 ) என்ற ஆட்டோ ஓட்டுனர் மிகவும் அதிவேகமாக குடிபோதையில் வாகனத்தை ஓடிவந்தார்.
அவரை பிடித்து தணிக்கை செய்யும் பொழுது அவர் குடிபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் போலீசார் பிடித்து வைத்து இருந்த மற்றொரு வாகனத்தை அங்கிருந்து, எடுத்துக் கொண்டு அருகிலுள்ள இருக்கும் வழியாக செல்ல முற்படும் போது, அவருடன் சென்ற தலைமை காவலர் திரு. சதீஷ் என்பவர் பிடித்து, ராயபுரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து, மது குடித்திற்கும் அளவை சோதனை செய்த போது, அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
குடிபோதையில் இருந்த அவர், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குடி போதையில் இருந்தவரை இலாவகமாக கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்ற போக்குவரத்து ஆய்வாளர் திரு. ஜெயக்குமார், ராயபுரம் போக்குவரத்து ஆய்வாளர் திரு.கோதண்டம் மற்றும் தலைமை காவலர்கள் திரு.சிவா, திரு.தியாகு, மற்றும் முத்தையால்ப்பேட்டை காவல் நிலைய காவலர்களுக்கு அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
தா. அப்துல் ஹபீஸ்
வட சென்னை மாவட்ட தலைவர்