கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினரால் (11.05.2023) முதல் (31.07.2023) வரை 289 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மதுபான பாட்டில்கள் நீதிமன்ற உத்திரவின் படி மற்றும் நீதி மன்ற வழிகாட்டுதல் பேரில் (Section 14 of TNP 30(2) {a} and section 7 of TNP Act G.O.Ms.No.187/P&E VIII Department Dt.25.10.1994) ன்படி அதனை அழிமானம் செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஓசூர் மதுவிலக்க அமாலக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் கோரியுள்ளார். எனவே கர்நாடக அரசு மதுபானங்கள் கள்ளத்தனமாக கடத்திவரப்பட்டதை கைப்பற்றப்பட்ட 4989 பாட்டில்கள்/ பவுச்சுகள் மொத்தம் 1189.535 மி. லிட்டர்கள் தகுதியற்றது.
மதுபான பாட்டில்கள் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வைத்திருந்தால் மனித உயிருக்கு ஆபத்து என்றும், தீ விபத்து ஏற்படக்கூடிய நிலை இருப்பதாலும் நீதி மன்ற வழிகாட்டுதல் பேரில் (Section 14 of TNP 30(2) (a) and section 7 of TNP Act G.O.Ms.No.187/P&E VIll Department Dt.25.10.1994) ன்படி மேற்படி கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களை (26.09.2023) அன்று 3.00 மணி முதல் 5.00 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் மற்றும் உள்வட்டம், பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் உள்ள வருவாய் துறைக்குட்பட்ட நிலத்தில் உதவி ஆணையர்(ஆயம்) முன்னிலையில் ஒசூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர், ஒசூர் கோட்ட ஆய அலுவலர், பீர்ஜேப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் கொட்டி உடைத்து தீயிட்டு கொளுத்தி அழித்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்