திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மதுபான கடத்தல் வழக்கில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் உத்தரவின்பேரில் பத்திரிக்கைகள் மூலம் பொது ஏலம் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று (07.10.21) திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 97 வாகனங்கள் (TWO WHEELER-91 FOUR WHEELER-06) சட்டவிதிமுறைகளுக்குட்பட்டு ஏலம் விடப்பட்டது. அவ்வாறு ஏலம்விடப்பட்ட வாகனங்கள் மூலம்
பெறப்பட்ட ரூ.14,05,000/- அரசுக்கு ஆதாயமாக சேர்க்கப்பட்டது.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா