இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக் அவர்கள் உத்தரவின் பேரில்,மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட மாவட்ட காவல்துறை
மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 74 நபர்கள் மீது TNP Act – ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 1401 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.