தென்காசி: சிவகிரி போலீசார் தேவிபட்டணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவிபட்டணம் அண்ணா புதுக்காலனி சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த தேவிபட்டினம் ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(35) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வைத்திருந்த பையில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.













