திருவாரூர்: எரவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது நான்கு சக்கர வாகனத்தில் பாண்டிச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்த – 1.காரைக்கால், திருநள்ளார், மேற்கு தெருவை சேர்ந்த சாரங்கபாணி மகன் பாலசுப்ரமணியன் (வயது -42). 2.விழுத்தியூர், சங்கரன் தோப்பு பகுதியை சேர்ந்த பாலு மகன் பவித்திரன் (வயது -25). ஆகிய இருவர் கைது. மேற்படி, நபர்கள் கடத்தி வந்த 165 – பாண்டிச்சேரி மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய நான்குசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு மது கடத்தலில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த எரவாஞ்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராமமூர்த்தி மற்றும் முதல் நிலை காவலர் GrI-853 ஆகியோரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri)., அவர்கள் பாராட்டினார்கள்.பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மது கடத்தல் மற்றும் கள்ளசந்தையில் மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.