திருவாரூர்: பாண்டிச்சேரியிலிருந்து திருவாரூர் வழியாக இன்று (02.09.2021) சட்டவிரோதமாக, பாண்டி மாநில சாராயம் மற்றும் மதுபான பாட்டில்களை காரில் கடத்தி வந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1.இந்திரகுமார் 29 2.முத்துமுருகன் 37 இராமநாதபுரம் மாவட்டம் ஆகியோரை திருவாரூர் போக்குவரத்து காவலர் திரு.கமலநாதன் (Grd1/1366) என்பவர் மடக்கி பிடித்து கைது செய்து,
Chevrolet car – 01 (TN 65 T 2727) 50 லிட் பாண்டி சாராயம் மற்றும் 400 (180 ml) பாண்டி சாராய பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளார். சிறப்பாக செயல்பட்ட திருவாரூர் போக்குவரத்து பிரிவு திரு.கமலநாதன் (Gr-I 1364) என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்கள்.