சென்னை: சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப,. அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக, V-5 திருமங்கலம் காவல்
நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் 29.05.2021 அன்று அண்ணா நகர் மேற்கு, தங்கம் காலனி 26 வது நிழற்சாலையில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது,
அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்த தனுஷ்பின்தாஸ், வ/35, நேபாளம் என்பவரை கைது செய்தனர். மேற்படி வீட்டில் சோதனை மேற்கொண்டு 1,398 மதுபாட்டில்கள் பணம் ரூ.25,300/- பறிமுதல் கைப்பற்றப்பட்டு, அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.