திண்டுக்கல்: பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைபகுதியில், எஸ்.ஐ. திரு.அசோக் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர்.
மதுபானங்கள் போலீஸார் கண்காணிப்பை மீறி விற்கப்படுவதாக வந்த தகவலால்போலீஸார், தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர்.
அப்போது பழனிசெட்டிபட்டியை சேர்ந்த கோடிஸ்வரன் 28, என்பவரிடம் இருந்து 26மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குபதிவு செய்து, கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















