கோவை: இடையர்பாளையம் ரோட்டில் இன்று நின்றுகொண்டிருந்த ஒரு லாரியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்திருப்பதாக சுல்தான் பேட்டை போலீசுக்கு தகவல் வந்தது.
இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீஸ்காரர்கள் உதயகுமார், வெற்றிவேல் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த லாரியை சோதனை செய்தனர்.
அப்போது 12 சக்கரம் பொருத்தப்பட்ட அந்த லாரியில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பெரியவெங்காயம் வெள்ளைப் பூண்டுக்கு அடியில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 164. 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட 803 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ 79 ஆயிரத்து 593 ரூபாய் ஆகும். சங்ககிரி வடுகபட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சங்கர் தப்பி ஒடிவிட்டார், இவரை போலீசார் தேடி வருகிறார்கள்.