கோவை: கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து ரயிலில் தமிழ்நாட்டுக்கு மதுபாட்டில்களை கடத்தி வருவதாக ரயில்வே காவல்துறைக்கு தகவல் வந்தது .இதையடுத்து ரயில்வே காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் இதைபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது
.இவர்கள் கர்நாடகா, ஆந்திரா, மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய ரயில்களில் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது 1524 .25 லிட்டர் வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 42 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் அந்தந்த மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
ரெயிலில் கடத்திவரப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த ரயில்வே காவல்துறையினரை டி.ஜி.பி சைலேந்திரபாபு பாராட்டினார். ரயில் நிலையங்களில் நடக்கும் குற்றங்களுக்கு 1512 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும் .மேலும் 99 62 500 500 என்ற செல்போன் எண்ணுக்கு அழைத்து குற்ற சம்பவங்களை குறித்து தகவல் தெரிவிக்கலாம் .என்று ரயில்வே காவல்துறை சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது .