திருவண்ணாமலை: ஆரணியை அடுத்த இரும்பேடு கூட்டுச்சாலை மொத்த காய்கறி சந்தை அருகே ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் காவல் உதவி ஆய்வாளர் சகாபுதீன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரியை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது லாரியில் காய்கறி மூட்டைகளின் நடுவே 193 கர்நாடக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்த மூர்த்தி(24),வேப்பம்பட்டி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் மாதப்பன் (வயது 32) ஆகிய இருவரும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 193 மது பாட்டில்களையும், லாரியையும் பறிமுதல் செய்தனர்.