சென்னை: சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டுள்ளதின்
தொடர்ச்சியாக, M7 மணலி புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் 1.06.2021 அன்று மணலி புது நகர், விச்சூர், பெருமாள்
கோயில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி விசாரணை செய்து, இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்த சாக்கு பையை
சோதனை செய்து, அதில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை எடுத்து வந்த 1.விஜய், வ/24, விச்சூர் 2.சூர்யா, வ/25, விச்சூர் 3.நிதன்ராஜா, வ/28, விச்சூர் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து
180 மி.லி. அளவு கொண்ட 59 மதுபாட்டில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.