சென்னை: சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக, M4 செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் குழுவினர் 08.06.2021 அன்று மதியம் செங்குன்றம், திருவள்ளூர் கூட்டு ரோடு சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது,
அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமாக ஆந்திர பிரதேசம் மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை எடுத்து வந்த 1.ஜெகநாதன், (வ/23) பாரதி நகர் 2.சுசிந்தர், (வ/23) வியாசர்பாடி ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 750 மி.லி. அளவு கொண்ட 3 மதுபாட்டில்கள், 180 மி.லி. அளவு கொண்ட 15 மதுபாட்டில்கள் என மொத்தம் 18 மதுபாட்டில்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும் குற்ற எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.