சென்னை: சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக, M1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்.
காவல் குழுவினர் 08.06.2021 அன்று காலை மாதவரம் ரவுண்டனா அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே நடந்து வந்த 2 திருநங்கைகளை நிறுத்தி விசாரணை செய்து,
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்து, ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை எடுத்து வந்த 1.லென்சி, (வ/22), (திருநங்கை), திருமங்கலம் வாட்டர் டேங்க் 2.ருத்ரா, (வ/29), (திருநங்கை), தண்டையார்பேட்டை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 65 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும், இதே போல சட்டவிரோதமாக ஆந்திர பிரதேசம் மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை மறைத்து எடுத்து வந்த ஷகில், வ/22 நெற்குன்றம் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 35 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் குற்ற எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.