கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய் துறை அலுவலர்கள் ரோந்து அலுவலில் இருந்தபோது கிருஷ்ணகிரி டவுன் திருப்பதி கவுண்டர் திருமண மண்டபம் முன்பு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி 3 யூனிட் மண் இருந்தது, மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்