சிவகங்கை : ராமநாதபுரம் சரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு ஆய்வு மேற்கொண்டு வருவதன் தொடர்ச்சியாக (21.10.2023) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் திருவேகம்புத்தூர் காவல் நிலையத்தினை ஆய்வு செய்து, “மண்ணின் மனம் குளிர மானிடன் தன் வாழ்வின் தரம் நிமிர வரம் தரும் மரம் நடுவோம்” என்னும் கூற்றுக்கிணங்க மரம் நடவு செய்து, அதிகாரிகள் மற்றும் ஆளினார்களிடம் குறைகளை கேட்டறிந்து, அறிவுரையும் வாழ்த்துக்களையும் வழங்கினார். உடன் தேவகோட்டை உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.பார்த்திபன், தேவகோட்டை தாலுகா வட்டக் காவல் ஆய்வாளர் திரு.சரவணன், திருவேகம்புத்தூர் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.வினோத், மற்றும் அதிகாரிகள், ஆளினர்கள் உடன் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி