தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட முறப்பநாடு காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் திரு. பார்த்திபன் அவர்கள் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது முறப்பநாடு காலாங்கரை ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆற்றுமணல் திருட்டு வழக்கில் கலியாவூர் வேதக் கோயில் தெருவைச் சேர்ந்த வேலு மகன் கமல்ராஜ் (26) மற்றும் கென்னடி தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் பழனி (40) ஆகிய இருவரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும் சட்டவிரோதமாக மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 4 லாரிகள், 1 (407) மினி லாரி மற்றும் 1 ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி இவ்வழக்கின் முக்கிய எதிரியான கமல்ராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தற்போதைய காவல் ஆய்வாளர் திரு. பாஸ்கரன் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார். மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் எதிரி கலியவூர் வேத கோயில் தெருவை சேர்ந்த வேலு மகன் கமல்ராஜ் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் எதிரி கமல்ராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி