திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட உதவி ஆய்வாளர் திரு. பழனி, அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மானூர், பெரிய குளத்தில் இருந்து களக்குடி பகுதியை சேர்ந்த சிவக்குமார் (29), சிவன் (35), குப்பணாபுரம் பகுதியைச் சேர்ந்த இயேசுராஜா (22), ஆகியோர் சேர்ந்து ஜே.சி.பி இயந்திரம் மூலமாக டிராக்டரில் சரள் மண்ணை அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள் சிவக்குமார், சிவன், இயேசுராஜா ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சரள் மண் திருட்டிற்கு பயன்படுத்திய ஜே.சி.பி இயந்திரம், டிராக்டர்,1 யூனிட் சரள் மண் மற்றும் இரண்டு இருசக்கர வாகனம் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.