பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபடும் நபர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் இன்று 23.08.2021-ம் தேதி பெரம்பலூர் மாவட்டம், அத்தியூர் இந்திரா நகர், கிழக்கு தெருவில் அரசு அனுமதியின்றி TN 50 H 4597 என்ற TATA MAGIC என்ற வாகனத்தில் மணல் மூட்டையை எடுத்து சென்ற ராஜவேல், கிழக்கு தெரு, அத்தியூர் என்பவரை பிடித்து கைது செய்து மேற்படி வாகனத்துடன் காவல் நிலையம் வந்தார்.
பின்னர் பெரம்பலூர் மாவட்டம், பெருமத்தூர், வடக்கு தெருவில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடி சென்ற ரெங்கசாமி, பெருமாள் கோவில் தெரு, நல்லூர், பெருமத்தூர் அஞ்சல், என்பவரை பிடித்து கைது செய்து மாட்டு வண்டியுடன் நிலையம் வந்தார்.
மேற்படி நபர்கள் மீது மங்களமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இரண்டு நபர்களையும் நீதிமன்ற காவலுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஜெயராமன் அவர்கள் அனுப்பி வைத்தார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை